பக்த மெய்யன்பர்களே வணக்கம். சுபஸ்ரீ நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் ஆவணி மாதம் 15ஆம் நாள் ஆங்கிலம் 31/08/2022 புதன்கிழமை சதுர்த்தி திதியும், அஸ்த நட்சத்திரமும் கூடிய சுபயோக சுபதினத்தில் ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெறவுள்ளது. எனவே, பக்த மெய்யன்பர்கள் நமது இந்து சமய நெறி முறைகளுடன் இப்பூஜையில் கலந்து கொண்டு எல்லாம் வல்ல ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ கருமாரியம்மன், ஸ்ரீ முனீஸ்வரர் மற்றும் பரிவார சுவாமிகளின் திருவருட் கடாட்சம் பெற்று வையத்துள் வாழ்வாங்கு வாழ அன்புடன் அழைக்கின்றோம்.