எல்லாம் வல்ல எம்பிராட்டியின் தனிப்பெருங்கருணையினாலே இப்பூவுலகில் கண்கண்ட தெய்வமாய் விளங்குபவளாம் அன்னை பராசக்தியானவர் பல ரூபங்களிலும் பல அவதாரங்கள் கொண்டு இப்பூவுலகைக் காத்து வரும் அண்ட சராசரத்தையும் ஆட்கொண்டிருக்கும் அன்னையாம் மழை வளமும் நிலவளமும் நிறைந்த மலேசிய திருநாட்டில், ஜெஞ்ஜாரோம் நகரில் குடிக் கொண்டிருக்கும் வேண்டுவோர்க்கு வேண்டிய வரங்களை அருள் பாலித்து வரும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி அன்னை தேவி ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில்.
சுபஸ்ரீ நிகழும் மங்களகரமான குரோத வருடம் சித்திரை மாதம் 17ம் நாள் ஆங்கிலம் (30/04/2024) செவ்வாய்க்கிழமை முதல் சித்திரை 22ம் நாள் ஆங்கிலம் (05/05/2024) ஞாயிற்றுக்கிழமை வரை சித்திரை வருடாந்திர மஹோற்சவம் பெருவிழா சிறப்பாக நடைபெற திருவருள் கூடியுள்ளது.
சித்திரை 17ம் நாள் (ஆங்கிலம் 30.04.2024) செவ்வாய்க்கிழமை, கிருஷ்ணபட்ஷமும், சஷ்டிதிதியும், உத்திராடம்
நட்சத்திரமும் சித்த யோகமும் கூடிய நன்நாளில், ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ முனீஸ்வரர் தேவி ஸ்ரீகருமாரியம்மன், ஸ்ரீ சுப்ரமணியர் மற்றும் பாரிவார சுவாமிகளுக்கும் வருடாபிஷேகம் சிறப்பாக நடைபெற உள்ளது.
குறிப்பு: 05/05/2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00மணி முதல் ஸ்ரீ முனீஸ்வரர் சிறப்பு ஹோமம், அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெறும். தொடர்ந்து மகேஸ்வர பூஜை, அன்னதானம் வழங்கப்படும் மற்றும் கொடி இறக்கம், மஞ்சள் நீராடல், திருப்பொன்னூஞ்சல், சிறப்பு உபயம் என்பன அன்றைய தினம் நடைபெறும்.
இங்ஙனம் : ஆலய நிர்வாகத்தினர்.
